செடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

செடி1செடி2

செடி1

வினைச்சொல்செடிக்க, செடித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (தாவரம்) அடர்த்தியாக வளர்தல்.

  ‘தூதுவளை நன்றாகச் செடித்து வளர்ந்துவிட்டது’
  ‘நட்டுவைத்து இவ்வளவு நாளாகியும் கருவேப்பிலைக் கன்று இன்னும் செடிக்கவில்லையே’

செடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

செடி1செடி2

செடி2

பெயர்ச்சொல்

 • 1

  (தரையில் நேராக வளரும்) மெல்லிய தண்டைக் கொண்ட சிறு தாவரம்.

  ‘பூச் செடிகள்’
  ‘கத்தரிச் செடி’
  ‘வெண்டைச் செடி’

 • 2

  (மரத்தின் வளர்ச்சியில்) மரமாவதற்கு முந்தைய நிலை.

  ‘பத்து வருடங்களுக்கு முன்பு நான் வைத்த மாங்கன்று என் கண்ணெதிரே வளர்ந்து செடியாகி இப்போது மரமாக நிற்கிறது’