தமிழ் செயல்திறன் யின் அர்த்தம்

செயல்திறன்

பெயர்ச்சொல்

  • 1

    (மனிதர்கள் அல்லது இயந்திரங்கள்) சக்தியையோ திறமையையோ பயன்படுத்திச் செய்யும் வேலையின் திறன் அல்லது அளவு.

    ‘தொழிலாளர்களின் செயல்திறன் அதிகரித்தால்தான் நாட்டின் உற்பத்தி அதிகரிக்கும்’
    ‘சரியாகப் பராமரிக்காவிட்டால் இயந்திரங்களின் செயல்திறன் குறைந்துவிடும்’
    ‘வயதாகும்போது உடல் உறுப்புகளின் செயல்திறன் இயல்பாகக் குறைந்துவிடுகிறது’