செலவழி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

செலவழி1செலவழி2

செலவழி1

வினைச்சொல்செலவழிய, செலவழிந்து, செலவழிக்க, செலவழித்து

 • 1

  ஒரு காரியத்தைச் செய்ய அல்லது ஒரு பொருளை வாங்கப் பணம், நேரம், சக்தி போன்றவை பயன்படுத்தப்படுதல்.

  ‘ஊருக்குப் போய்வந்ததில் கையிலிருந்த பணம் முழுவதும் செலவழிந்துபோயிற்று’
  ‘ஞாயிற்றுக் கிழமையானால் வீட்டை ஒழுங்குபடுத்துவதிலேயே பாதி நேரம் செலவழிந்துவிடுகிறது’

செலவழி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

செலவழி1செலவழி2

செலவழி2

வினைச்சொல்செலவழிய, செலவழிந்து, செலவழிக்க, செலவழித்து

 • 1

  ஒரு காரியத்தைச் செய்ய அல்லது ஒரு பொருளை வாங்கப் பணம், நேரம், சக்தி போன்றவற்றைப் பயன்படுத்துதல்.

  ‘இவ்வளவு செலவழித்துப் படிக்கவைத்தும் மகனுக்கு வேலை கிடைக்கவில்லையே’
  ‘ஆறு கோடி ரூபாய் செலவழித்துக் கட்டிய பாலம்’
  ‘பல வீடுகளில் பிள்ளைகள் தொலைக்காட்சி பார்ப்பதிலேயே நேரத்தைச் செலவழிக்கின்றனர்’
  ‘மின்சாரத்தைச் சிக்கனமாகச் செலவழிக்க வேண்டும்’