தமிழ் செழி யின் அர்த்தம்

செழி

வினைச்சொல்செழிக்க, செழித்து

 • 1

  (செடி, கொடி, பயிர் முதலியன) நல்ல வளர்ச்சியுடன் அமைதல்; தழைத்தல்.

  ‘மழைக்குப் பிறகு நெற்பயிர் நன்றாகச் செழித்து வளர்ந்திருக்கிறது’
  ‘இந்த மண்ணில் வாழை செழிக்கும்’

 • 2

  நல்ல நிலை அடைதல்; சிறப்பு எய்துதல்.

  ‘வலையில் மீன்கள் வந்து விழுந்தால்தான் மீனவர்கள் வாழ்வு செழிக்கும்’
  ‘தொழில் வளம் பெருகினால் நாடு செழிக்கும்’