சொட்டு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சொட்டு1சொட்டு2சொட்டு3

சொட்டு1

வினைச்சொல்சொட்ட, சொட்டி

 • 1

  (திரவம்) சிறுசிறு துளிகளாக விழுதல்.

  ‘சொட்டும் வியர்வையைத் துடைக்கவும் நேரம் இல்லை’
  ‘காயம் பட்ட இடத்தில் இரத்தம் சொட்டியது’
  உரு வழக்கு ‘பக்தி ரசம் சொட்டும் பாசுரங்கள்’

சொட்டு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சொட்டு1சொட்டு2சொட்டு3

சொட்டு2

பெயர்ச்சொல்

 • 1

  திரவம் மிக மெதுவாகக் கீழே விழும்போது பெறப்படும் மிகச் சிறிய அளவு; துளி.

  ‘வண்டியிலிருந்து எண்ணெய் சொட்டுசொட்டாக ஒழுகியது’

 • 2

  மிகச் சிறிதளவு.

  ‘ஊரில் சொட்டு மழை இல்லாதபோது விவசாயம் எப்படிச் செய்வது?’
  ‘குடிக்க ஒரு சொட்டுத் தண்ணீர்கூட இல்லை’

சொட்டு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சொட்டு1சொட்டு2சொட்டு3

சொட்டு3

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (தேங்காய்) கீற்று.

  ‘தேங்காய்ச் சொட்டை அரைத்துப் பால் பிழிந்தாள்’