சொட்டை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சொட்டை1சொட்டை2

சொட்டை1

பெயர்ச்சொல்

 • 1

  (தலையில் ஒரு சிறு பகுதியில்) முடி உதிர்ந்து ஏற்படும் வெற்றிடம்; திட்டு போன்ற வழுக்கை.

  ‘சொட்டை விழுந்த இடத்தை மறைத்துச் சீவியிருந்தான்’
  ‘தலையில் சொட்டை விழ ஆரம்பித்துவிட்டது’

 • 2

  வட்டார வழக்கு உலோகப் பாத்திரங்களில் ஏற்படும் நெளிவு.

  ‘கிணற்றுச் சுவரில் மோதிக் குடம் சொட்டையாகிவிட்டது’

சொட்டை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சொட்டை1சொட்டை2

சொட்டை2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (அடுத்தவர் செயலில் காணும்) குற்றம்குறை.

  ‘எல்லாக் காரியத்துக்கும் சொட்டை சொல்லிக்கொண்டிருக்காதே’
  ‘நீ சொல்லிய சொட்டையால்தான் அவன் மனமுடைந்து வீட்டுக்கு வராமல் இருக்கிறான்’