தமிழ் சொல்லிவை யின் அர்த்தம்

சொல்லிவை

வினைச்சொல்-வைக்க, -வைத்து

 • 1

  (எச்சரிக்கை, தேவை முதலியவற்றை) முன்னரே கூறுதல்.

  ‘அவனோடு பழகுவதில் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லிவைத்தும் ஏமாந்துபோய்விட்டாயே!’
  ‘நாளைக்குச் செலவுக்குப் பணம் வேண்டும் என்றால் இப்போதே அவரிடம் சொல்லிவைக்க வேண்டும்’

 • 2

  எச்சரித்தல்.

  ‘‘அவனிடம் சொல்லிவை. நான் ரொம்ப மோசமான ஆள்’ என்று மிரட்டினான்’