தமிழ் சேர்ந்த யின் அர்த்தம்

சேர்ந்த

பெயரடை

 • 1

  (குறிப்பிட்ட ஊர், நாடு முதலியவற்றை) பிறப்பிடமாகவோ வாழ்விடமாகவோ கொண்ட; (ஒன்றை) எல்லையாகக் கொண்டு அதற்கு உட்பட்ட.

  ‘இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி’
  ‘மயிலாப்பூரைச் சேர்ந்த கந்தன் என்பவரை ஒரு வாரமாகக் காணவில்லை’
  ‘பெருங்குடி கிராமத்தைச் சேர்ந்த கந்தன்சாவடி’

 • 2

  (ஒரு பிரிவு, அமைப்பு முதலியவற்றில்) அங்கமாக உள்ள.

  ‘திமிங்கிலம் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த விலங்கு’
  ‘நீ எந்தப் பள்ளியைச் சேர்ந்த மாணவன்?’