தமிழ் தக்கவை யின் அர்த்தம்

தக்கவை

வினைச்சொல்-வைக்க, -வைத்து

  • 1

    (ஏற்கனவே தன் வசம் இருக்கும் ஒன்றை) இழக்காமல் தொடர்ந்து வைத்திருத்தல்.

    ‘ஆளும் கட்சி இடைத்தேர்தலில் தன் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது’
    ‘கபடிப் போட்டியில் சிறந்த அணி என்ற பெயரைத் தமிழ்நாடு தக்கவைத்துக்கொள்ளுமா?’
    ‘பதவியைத் தக்கவைத்துக்கொள்ள அவர் கடுமையாக உழைக்க வேண்டும்’