தமிழ் தகர் யின் அர்த்தம்

தகர்

வினைச்சொல்தகர, தகர்ந்து, தகர்க்க, தகர்த்து

 • 1

  (அழிந்துபோகும் வகையில் தாக்கப்பட்டு) சிதறுதல்; உடைதல்; உருக்குலைதல்.

  ‘வெடிகுண்டு வீச்சினால் வீடுகள் தகர்ந்தன’
  உரு வழக்கு ‘காலம் மாறும்போது பல மதிப்பீடுகள் தகர்ந்துபோகின்றன’
  உரு வழக்கு ‘என்னுடைய கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தகர்ந்துவிட்டது’

தமிழ் தகர் யின் அர்த்தம்

தகர்

வினைச்சொல்தகர, தகர்ந்து, தகர்க்க, தகர்த்து

 • 1

  (அழிந்துபோகும் அல்லது உருக்குலைந்துபோகும் வகையில்) சிதறச் செய்தல்; நாசப்படுத்துதல்.

  ‘பாலத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கச் சதி!’
  ‘கைவிலங்கைத் தகர்த்தெறிந்தான்’
  உரு வழக்கு ‘என் மனக்கோட்டையைத் தகர்த்துவிட்டாயே!’
  உரு வழக்கு ‘சார்பியல் கோட்பாடு சில இயற்பியல் அடிப்படைகளைத் தகர்ப்பதாக இருந்தது’

 • 2

  (விளையாட்டுப் போட்டிகளில் முந்தைய சாதனைகளை) முறியடித்தல்.

  ‘அந்த வீரர் மிக வேகமாக ஓடி உலகச் சாதனையைத் தகர்த்தார்’