தமிழ் தகவல் யின் அர்த்தம்

தகவல்

பெயர்ச்சொல்

 • 1

  (குறிப்பிட்ட ஒருவரை அல்லது ஒன்றைக் குறித்து) ஒருவரிடம் இருக்கும் செய்தி/பிறர் அறியும் வகையில் வெளிப்படுத்தப்படும் செய்தி.

  ‘உன்னிடம் அவர் ஏதாவது தகவல் சொல்லியனுப்பினாரா?’
  ‘குற்றவாளியைப் பற்றிய தகவல் தெரிவிப்போருக்கு உரிய சன்மானம் வழங்கப்படும்’
  ‘புயல் நள்ளிரவில் கரையைக் கடக்கும் என்பது செயற்கைக்கோள்மூலமாகக் கிடைத்த தகவல்’

 • 2

  மின்காந்த அலைகள் போன்றவற்றைப் பயன்படுத்தி அனுப்பப்படும் அல்லது கணிப்பொறி போன்ற சாதனங்களைப் பயன்படுத்திச் சேமித்துவைக்கப்படும் செய்தி.

  ‘தேர்வு முடிவுகள் குறித்த தகவல்களைப் பகுத்துப் பார்க்க ஒரு மென்பொருள் தயாரித்திருக்கிறேன்’

 • 3

  புலன்கள் மூலம் மூளை பெறும் செய்தி.

  ‘நரம்புகள் மூளைக்கு எடுத்துச் செல்லும் தகவல்களை மூளை இனம் பிரித்துப்பார்க்கிறது’