தமிழ் தங்கு யின் அர்த்தம்

தங்கு

வினைச்சொல்தங்க, தங்கி

 • 1

  (குறிப்பிட்ட நோக்கத்துக்காக ஓர் இடத்தில்) குறிப்பிட்ட காலம்வரை இருத்தல்; வசித்தல்.

  ‘இன்னும் எத்தனை நாள் இந்த ஊரில் தங்குவீர்கள்?’
  ‘விடுதியில் தங்கிப் படிக்கிறாயா?’
  ‘படிப்பிற்காக வெளிநாடு சென்றவர் அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார்’
  உரு வழக்கு ‘நீ சொன்ன விஷயம் என் நினைவில் தங்கவில்லை’

 • 2

  (திரவங்களின் அடியில் ஒன்று) படிதல்.

  ‘காப்பியை நன்றாகக் கலக்காததால் சர்க்கரை தம்ளரின் அடியில் தங்கியிருக்கிறது’

 • 3

  எஞ்சுதல்.

  ‘எல்லாச் சாமான்களையும் விற்ற பிறகு இது மட்டும் தங்கிவிட்டது’

 • 4

  தேங்குதல்.

  ‘கழுவிவிட்ட நீர் வாசலிலேயே தங்கிவிட்டது’
  ‘அவன் மட்டும் எட்டாம் வகுப்பில் இரண்டு வருடங்கள் தங்கிவிட்டான்’

 • 5

  (பெரும்பாலும் எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) (ஒருவர் ஒரு வேலையில் அல்லது ஒருவரிடம் பணம் முதலியன) நிலைத்தல்.

  ‘எந்த வேலையிலும் தங்க மாட்டேன் என்கிறான்’
  ‘எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் கையில் தங்குவதே இல்லை’

 • 6

  பேச்சு வழக்கு (ஒரு பெண் கருவுற்று சிசு) கருப்பையில் கர்ப்ப காலம் முழுவதும் இருத்தல்.

  ‘இந்தத் தடவையும் அவளுக்குக் குழந்தை தங்கவில்லையா?’

தமிழ் தீங்கு யின் அர்த்தம்

தீங்கு

பெயர்ச்சொல்

 • 1

  (ஒருவருக்கு அல்லது ஒன்றுக்கு) கெடுதல் விளைவிக்கக்கூடியது; தீமை; கேடு.

  ‘அவர் எறும்புக்குக்கூடத் தீங்கு செய்ய மாட்டார்’
  ‘தீங்கு விளைவிக்கக்கூடிய மருந்துகளை அரசு தடைசெய்ய வேண்டும்’