தமிழ் தடங்கல் யின் அர்த்தம்

தடங்கல்

பெயர்ச்சொல்

 • 1

  (செயல், பணி, இயக்கம் முதலியவற்றின்) ஒழுங்கான போக்கில் ஏற்படும் பாதிப்பு; தடை; இடையூறு.

  ‘ஒளிபரப்பில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறோம்’
  ‘ஊழியர்களின் வேலைநிறுத்தத்தினால் குடிநீர் விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளது’
  ‘மின்சாரத் தடங்கலினால் நிகழ்ச்சி ஆரம்பிப்பது தாமதமாயிற்று’

 • 2

  அருகிவரும் வழக்கு ஆட்சேபம்.

  ‘நல்ல காரியத்துக்குத் தடங்கல் சொல்லாதே’