தமிழ் தட்டு யின் அர்த்தம்

தட்டு

வினைச்சொல்தட்ட, தட்டி

 • 1

  (ஒன்றை மற்றொன்றின் மீது படச் செய்தல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 (பாராட்டுவது, உணர்வு பெறச் செய்வது, விரைவுபடுத்துவது முதலியவற்றுக்காகக் கையால்) மெதுவாக அடித்தல்

   ‘‘நன்றாக வரைந்திருக்கிறாய்’ என்று கூறிப் பையனின் முதுகில் தட்டினார்’
   ‘புரையேறிவிட்டால் தலையில் தட்டுவார்கள்’
   ‘குதிரையைத் தட்டிவிட்டதும் அது வேகமாக ஓடத் தொடங்கியது’

  2. 1.2 (கை, கம்பு முதலியவற்றால்) சற்று விசையுடன் அடித்தல்

   ‘கதவை இரு முறை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான்’
   ‘ஆசிரியர் மேஜையைத் தட்டியதும் வகுப்பில் அமைதி ஏற்பட்டது’
   ‘தேங்காயைத் தட்டிப் பார்த்து வாங்கு’

 • 2

  (அடித்தல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (ஒன்றுக்குக் குறிப்பிட்ட வடிவம் கொடுப்பதற்காகக் கையாலோ கருவியாலோ அதை) அடித்தல்

   ‘சாணி உருண்டையைக் கையால் தட்டிச் சுவரில் அறைந்தாள்’
   ‘ஆணியைத் தட்டி நேராக்கிக் கொடு’

 • 3

  (விழச் செய்தல் தொடர்பான வழக்கு)

  1. 3.1வட்டார வழக்கு (குப்பையை) கொட்டுதல்

   ‘குப்பையைப் பக்கத்து வீட்டில் தட்டியதால் வந்தது தகராறு!’

  2. 3.2 (தூசி போன்றவை கீழே விழும்படி) அடித்து நீக்குதல்

   ‘புத்தகங்களையெல்லாம் தூசி தட்டி ஒழுங்காக அடுக்கி வை’

  3. 3.3 (காலை) தடுத்துத் தடை ஏற்படுத்துதல்

   ‘காலைத் தட்டி விழச்செய்தான்’

 • 4

  (மரபு வழக்கு)

  1. 4.1 (பெரும்பாலும் சமையலில் பயன்படுத்தும் பூண்டு, இஞ்சி போன்றவற்றை) நசுக்குதல்

   ‘இஞ்சி தட்டிப்போட்டு டீ வைத்தால் நன்றாக இருக்கும்’
   ‘நாலு பூண்டைத் தட்டிப் போட்டு ரசம் வை’

  2. 4.2 (பெரும்பாலும் எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) (பேச்சு, வேண்டுகோள் முதலியவற்றை) மறுத்தல்; புறக்கணித்தல்

   ‘நான் சொன்னால் தட்டாமல் செய்வார்’
   ‘அவர் சொன்னால் தட்ட முடியுமா?’

தமிழ் தீட்டு யின் அர்த்தம்

தீட்டு

வினைச்சொல்தீட்ட, தீட்டி

 • 1

  (கூர்மை, பொலிவு தருதல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 (கத்தி, கத்தரிக்கோல் போன்றவற்றைச் சாணைக்கல்லில்) கூராக்குவதற்காகத் தேய்த்தல்

   ‘அரிவாளை நன்றாகத் தீட்டிக் கொண்டு வா’
   உரு வழக்கு ‘செவிகளைத் தீட்டிக்கொண்டு அவர்கள் பேசுவதைக் கேட்டான்’
   உரு வழக்கு ‘புத்தியைத் தீட்டு’

  2. 1.2 (அரிசியை இயந்திரத்தில் இட்டு) சற்று வெண்மையாக்குதல்

   ‘தீட்டிய அரிசியில் சத்து குறையும்’

  3. 1.3 (அழகுபடுத்தும் நோக்கத்தோடு மை, வண்ணம் போன்றவற்றை) பூசிக்கொள்ளுதல்

   ‘மை தீட்டிய கண்கள்’
   ‘மாட்டுக் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டினான்’

  4. 1.4இலங்கைத் தமிழ் வழக்கு (பல்) துலக்குதல் அல்லது தேய்த்தல்

   ‘காலையில் எழுந்ததும் பல் தீட்டி, முகம் கழுவினான்’

 • 2

  (நுணுக்கத்துடன் ஒன்றை உருவாக்குதல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (தூரிகையினால் ஓவியம்) வரைதல்

   ‘ஓவியர் இயற்கைக் காட்சி ஒன்றை அற்புதமாகத் தீட்டியிருந்தார்’
   ‘நவீன பாணியில் தீட்டப்பட்டிருந்தது ஓவியம்’

  2. 2.2 (கட்டுரை, தலையங்கம் முதலியவற்றை) திறம்பட எழுதுதல்

   ‘அரசின் போக்குக்குறித்து ஆசிரியர் நீளமான தலையங்கம் ஒன்றைத் தீட்டியிருந்தார்’

  3. 2.3 (திட்டம், அறிக்கை போன்றவற்றை) தயாரித்தல்

   ‘பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க நிபுணர்கள் புதிய வழிமுறை ஒன்றைத் தீட்டியுள்ளனர்’
   ‘அவன் தீட்டியுள்ள சதித் திட்டம் இதுதான்’

 • 3

  (மரபு வழக்கு)

  1. 3.1பேச்சு வழக்கு (அதிகம் என்று தோன்றும்படியாக) தண்டனை விதித்தல்

   ‘நீதிபதி குற்றவாளிக்குப் பத்து வருடம் தீட்டிவிட்டார்’

  2. 3.2பேச்சு வழக்கு (அதிகம் என்று தோன்றும்படியாக) கட்டணம் போன்றவற்றை வசூலித்தல்

   ‘அந்த ஓட்டலுக்குப் போகாதே, தீட்டிவிடுவார்கள்’

தமிழ் தட்டு யின் அர்த்தம்

தட்டு

வினைச்சொல்தட்ட, தட்டி

 • 1

  (குறிப்பிட்ட உணர்வு, தன்மை அல்லது நிலை) ஏற்படுதல் அல்லது தோன்றுதல்.

  ‘ஒரே வேலையைத் திரும்பத்திரும்பச் செய்தால் சோர்வு தட்டாதா?’
  ‘அவனுடைய குரலில் பிசிர் தட்டியது’
  ‘அதற்குள் உனக்கு நரை தட்டிவிட்டதா?’
  ‘எனக்கு இன்று அதிகாலையிலேயே விழிப்புத் தட்டியது’

தமிழ் தீட்டு யின் அர்த்தம்

தீட்டு

பெயர்ச்சொல்

 • 1

  (பிரசவித்த அல்லது மாதவிலக்கில் உள்ள பெண்ணைத் தொடுவது அல்லது இறந்துபோன ஒருவரின் வீட்டுக்குச் சென்றுவிட்டு வருவது முதலியவற்றால் ஒருவருக்கு ஏற்படுவதாக நம்பப்படும்) தூய்மைக் குறைவு.

 • 2

  மாதவிலக்கு; மாதவிடாய்.

தமிழ் தட்டு யின் அர்த்தம்

தட்டு

வினைச்சொல்தட்ட, தட்டி

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (புத்தகம் போன்றவற்றின் பக்கத்தை) புரட்டுதல்.

  ‘புத்தகத்தைப் படிக்காமல் ஒற்றையைத் தட்டிக்கொண்டிருக்கிறாயா?’

தமிழ் தட்டு யின் அர்த்தம்

தட்டு

பெயர்ச்சொல்

 • 1

  (உலோகத்தால் செய்யப்பட்டது)

  1. 1.1 (உணவு உண்பது, பாத்திரங்களை மூடுவது, பூஜைப் பொருள்களை வைப்பது போன்றவற்றுக்குப் பயன்படும்) தட்டையான பரப்பும் சற்று உயர்ந்த விளிம்பும் கொண்ட வட்ட வடிவப் பாத்திரம்

  2. 1.2 (தராசில் பொருளையும் எடைக்கல்லையும் வைக்கப் பயன்படும்) தட்டையான அல்லது சற்றுக் குழிந்த வட்ட வடிவக் கிண்ணம் போன்ற அமைப்பு

 • 2

  (பிரிக்கப்படுவது)

  1. 2.1 (வைப்பதற்கு அல்லது இருப்பதற்கு) பிரிக்கப்பட்டிருக்கும் அடுக்கு

   ‘ரயிலில் மேல்தட்டில் படுத்திருந்த பெரியவர் கீழே இறங்குவதற்குச் சிரமப்பட்டார்’
   ‘அலமாரியின் மேல்தட்டில் வை’

  2. 2.2 (சமுதாய) பிரிவு; நிலை

   ‘சமுதாயத்தின் எல்லாத் தட்டு மக்களிடமும் செல்வாக்கு உடையவர்’

  3. 2.3 (சேலை, வேட்டி ஆகியவற்றின்) சுற்று

   ‘தட்டு வைத்துப் புடவை கட்டியிருந்தாள்’
   ‘தட்டு வேட்டி கட்டியிருந்த பையன்’

  4. 2.4

தமிழ் தட்டு யின் அர்த்தம்

தட்டு

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு

தமிழ் தட்டு யின் அர்த்தம்

தட்டு

பெயர்ச்சொல்