தமிழ் தட்டுக்கெடு யின் அர்த்தம்

தட்டுக்கெடு

வினைச்சொல்-கெட, -கெட்டு

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு நிலைதடுமாறுதல்; நிலைகுலைதல்.

  ‘உன் அண்ணனை இப்படித் திட்டுகிறாயே, புத்தி தட்டுக்கெட்டுவிட்டதா உனக்கு?’
  ‘சொன்னபடி கேட்காதவன் எப்படித் தட்டுக்கெட்டு அலைந்தால்தான் என்ன?’

 • 2

  பேச்சு வழக்கு வீணாதல்; நஷ்டமடைதல்.

  ‘நீ இன்னும் ஒரு அரை மணி நேரம் கழித்துக் கிளம்புவதால் ஒன்றும் தட்டுக்கெட்டுப்போய்விடாது’