தமிழ் தடம் யின் அர்த்தம்

தடம்

பெயர்ச்சொல்

 • 1

  சுவடு.

  ‘கால் தடம்’

 • 2

  (பாதை இல்லாத இடங்களில்) காலின் சுவடு பதிந்து ஏற்பட்ட சிறு பாதை.

  ‘இந்தத் தடத்திலேயே போனால் கிராமம் வந்துவிடும்’

 • 3

  (குறிப்பிட்ட இரண்டு இடங்களுக்கு) இடையே (பேருந்து முதலியவை) செல்லும் வழி.

  ‘இந்தத் தடத்தில் விரைவுப் பேருந்துகள் அரைமணி நேரத்திற்கு ஒன்றாக விடப்படுகின்றன’

 • 4

  (தொலைத்தொடர்புத் தொழில்நுட்பத்தில்) குறிப்பிட்ட இடத்துக்குச் செல்லும் தெலைபேசி இணைப்புகளின் தொடர்.

  ‘இந்தத் தடத்தில் அனைத்து எண்களும் உபயோகத்தில் உள்ளன’

 • 5

  (ஓட்டப் பந்தயம், தடை ஓட்டம் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் விளையாட்டு மைதானத்தின்) வகுக்கப்பட்ட வளைய வடிவில் அமைந்த ஓட்டப் பாதை.

  ‘மூன்றாம் தடத்தில் ஓடிக்கொண்டிருப்பவர் முந்திக்கொண்டு வந்துவிடுவார் போலிருக்கிறதே!’