தமிழ் தண்டம் யின் அர்த்தம்

தண்டம்

பெயர்ச்சொல்

 • 1

  எந்த விதப் பயனும் இல்லாமல் போவது; வீண்.

  ‘இதை வாங்கியிருக்கவே வேண்டாம்; ஆயிரம் ரூபாய் தண்டம்’
  ‘புகை பிடிப்பது தண்டச் செலவு என்று தெரிந்தாலும் விட முடியவில்லை’
  ‘கையில் காசு இல்லாத நேரத்தில் தண்டமாக நூறு ரூபாய் செலவு செய்ய வேண்டுமா?’

தமிழ் தண்டம் யின் அர்த்தம்

தண்டம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு தண்டனை.

  ‘அரச தண்டத்திலிருந்து அவர் தப்பித்தார்’

 • 2

  அருகிவரும் வழக்கு அபராதம்.

  ‘ஊர்ப் பஞ்சாயத்தில் அவன் தண்டம் செலுத்த ஒப்புக்கொண்டான்’

தமிழ் தண்டம் யின் அர்த்தம்

தண்டம்

பெயர்ச்சொல்

 • 1

  (மடங்களின் தலைவர்கள் ஏந்தும்) நுனியில் கொடி முடிந்துள்ள நீண்ட கம்பு.

 • 2

  (தவம் செய்யும்போது கையைத் தாங்க முனிவர் பயன்படுத்திய) கவை வடிவ மரக் கழி.