தமிழ் தத்துவம் யின் அர்த்தம்

தத்துவம்

பெயர்ச்சொல்

 • 1

  பிரபஞ்சத்திற்கும் மனிதருக்கும் உள்ள உறவு, மனித வாழ்வின் பொருள், குறிக்கோள் ஆகியவற்றைப் பற்றிச் சிந்தனை ரீதியாக ஆராயும் துறை.

 • 2

  கொள்கை.

  ‘உன் அரசியல் தத்துவம்தான் என்ன?’
  ‘மார்க்சிய தத்துவ ரீதியான எழுத்து’

 • 3

  (அறிவியல் ரீதியாக) ஒன்று எவ்வாறு நிகழ்கிறது அல்லது செயல்படுகிறது என்பதை விளக்கும் அடிப்படைக் கருத்து அல்லது விதி.

  ‘நெம்புகோல் தத்துவத்தின் அடிப்படையில் இந்த இயந்திரம் இயங்குகிறது’

தமிழ் தத்துவம் யின் அர்த்தம்

தத்துவம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு அதிகாரம்; உரிமை.

  ‘நீ என்னை வெளியில் போகச் சொல்ல முடியாது; என் தகப்பன் சொத்தில் எனக்கும் தத்துவம் உண்டு’
  ‘எனக்குத் தத்துவம் வைத்துப் பிள்ளைகளுக்குக் காணியை உறுதி முடித்துள்ளேன்’