தமிழ் தத்தெடு யின் அர்த்தம்

தத்தெடு

வினைச்சொல்-எடுக்க, -எடுத்து

 • 1

  ஒருவர் மற்றொருவருடைய குழந்தையைச் சட்டபூர்வமாகத் தன்னுடைய குழந்தையாக ஏற்றுக்கொள்ளுதல்.

  ‘குழந்தைப்பேறு இல்லாதவர்கள் அநாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கிறார்கள்’
  ‘பூகம்பத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளைத் தத்தெடுக்கப் பலர் முன்வந்துள்ளனர்’

 • 2

  (பேணி முன்னேற்றும் நோக்கில் ஒன்றை அல்லது ஒருவரை) பொறுப்பில் எடுத்துக்கொள்ளுதல்.

  ‘இந்தச் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களைப் பாரத ஸ்டேட் வங்கி தத்தெடுத்துக்கொண்டுள்ளது’
  ‘சிறந்த விளையாட்டு வீரர்களைப் பெரிய வர்த்தக நிறுவனங்கள் தத்தெடுத்துக்கொள்ள வேண்டும்’