தமிழ் தந்திரம் யின் அர்த்தம்

தந்திரம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (ஒருவரை ஏமாற்ற அல்லது ஒரு காரியத்தைச் சாதிக்கக் கையாளும்) சாமர்த்தியமான வழிமுறை.

  ‘வருமான வரி கட்டாமல் ஏய்ப்பதற்கு நஷ்டம் காட்டுவது ஒரு தந்திரம்’
  ‘ஒரு தந்திரம் பண்ணி அவனிடமிருந்து பணத்தைக் கறந்துவிட்டேன்’
  ‘அவனுடைய தந்திரமான பேச்சில் மயங்கிவிடாதே’

 • 2

  எதிரியை வெல்கிற வகையில் திட்டத்துடன் செயல்படும் முறை.

  ‘பதுங்கியிருந்து தாக்கிவிட்டு ஓடுவது கொரில்லாப் போர்த் தந்திரம்’

தமிழ் தந்திரம் யின் அர்த்தம்

தந்திரம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

தத்துவம்
 • 1

  தத்துவம்
  மனிதனிடம் பொதிந்துள்ள சக்தியைப் புறப்பொருள்களிலிருந்து விடுவித்து உள்முகப்படுத்துவது மூலம் தீவிரப்படுத்தும் முறை.