தமிழ் தப்பட்டை யின் அர்த்தம்

தப்பட்டை

பெயர்ச்சொல்

  • 1

    தோளில் மாட்டிக்கொண்டு குச்சியால் அடித்து ஒலி எழுப்பும், வட்டமான ஒரு வகைத் தோல் கருவி.

    ‘சாவு நிகழ்ந்த வீட்டிலிருந்து தப்பட்டை அடிக்கும் சத்தம் கேட்டது’
    ‘தாரை, தப்பட்டை முழங்கியதும் தேர் நகரத் தொடங்கியது’