தமிழ் தமாஷ் யின் அர்த்தம்

தமாஷ்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  சிரிப்பை வரவழைக்கும் செயல் அல்லது பேச்சு; நகைச்சுவை.

  ‘அவன் எப்போதும் தமாஷாகப் பேசிக்கொண்டிருப்பான்’
  ‘அவர் தமாஷ் செய்கிறார், புரியவில்லையா?’

 • 2

  சிரிப்பூட்டக் கூடிய விதத்தில் சுவாரசியமாக நிகழ்வது; வேடிக்கை.

  ‘தமாஷ் பார்க்க வந்ததைப் போலக் கூட்டம் அவனைச் சுற்றி நின்றது’

 • 3

  விளையாட்டான போக்கு.

  ‘பழகுவதைப் பார்த்துத் தமாஷான ஆள் என்று நினைத்து ஏமாந்துவிடாதே’