தமிழ் தயார் யின் அர்த்தம்

தயார்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (ஒருவர்) மன அளவில் அல்லது செயல் அளவில் உடனடியாக ஒன்றைச் செய்யத் தகுந்தவாறு இருக்கும் நிலை/(ஒன்று) உடனடியாகப் பயன்படுத்தக் கூடிய அளவில் இருக்கிற நிலை.

  ‘சண்டையை மறந்து சமாதானமாகப் போக நான் தயார்’
  ‘வெளியே கிளம்பத் தயாராகிவிட்டான்’
  ‘மெழுகுவர்த்தியைத் தயாராக வை. எந்த நேரத்திலும் மின்சாரம் போய்விடலாம்’
  ‘எல்லைப் பிரச்சினையைச் சமாளிக்க ராணுவம் தயாரான நிலையில் உள்ளது என்று பிரதமர் அறிவித்தார்’