தமிழ் தயாரிப்பாளர் யின் அர்த்தம்

தயாரிப்பாளர்

பெயர்ச்சொல்

 • 1

  (பொருள்களை) தயாரிப்பவர்; உற்பத்திசெய்பவர்.

  ‘உலகப் புகழ்பெற்ற கடிகாரத் தயாரிப்பாளர்’
  ‘ஏற்றுமதிப் பொருள் தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது’
  ‘எண்ணெய் விலையை இரண்டு ரூபாய் குறைக்கத் தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளனர்’

 • 2

  (திரைப்படம், நாடகம் போன்றவற்றை உருவாக்குவதில்) நிர்வாகப் பொறுப்பையும் நிதிச் செலவையும் ஏற்பவர்.

  ‘இந்தப் படத்தினால் தயாரிப்பாளருக்குப் பெரும் நஷ்டம்’
  ‘திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்’