தமிழ் தரக்குறைவு யின் அர்த்தம்

தரக்குறைவு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (பேச்சு, எழுத்து, நடத்தை முதலியவை குறித்து வரும்போது) நாகரிகமற்ற தன்மை அல்லது ஆபாசம்.

  ‘முதலில் தரக்குறைவாகப் பேசுவதை நிறுத்து’
  ‘பெண்களை இழிவுபடுத்தும் தரக்குறைவான திரைப்படச் சுவரொட்டிகள்’

 • 2

  கௌரவக் குறைவு.

  ‘என்னைத் தன் அண்ணன் என்று சொல்வதையே அவன் தரக்குறைவாக நினைக்கிறானோ?’
  ‘தாய்மொழியில் பேசுவதையே சிலர் தரக்குறைவாக நினைக்கிறார்கள்!’