தமிழ் தரதரவென்று யின் அர்த்தம்

தரதரவென்று

வினையடை

  • 1

    (‘இழு’ என்னும் வினையோடு வரும்போது) ஒருவரை இயல்பாக நடக்கவிடாமல் பிடித்து வேகமாக/பொருள்கள் தரையில் உராய்ந்துகொண்டே வரும் வகையில்.

    ‘பள்ளி செல்ல அடம்பிடித்த குழந்தையைத் தரதரவென்று இழுத்துக்கொண்டு சென்றாள்’
    ‘பெட்டியைத் தூக்குங்கள்; தரதரவென்று இழுக்காதீர்கள்’