தமிழ் தர்ம யின் அர்த்தம்

தர்ம

பெயரடை

 • 1

  (சேவை வழங்கும்போது) கட்டணம் எதுவும் வசூலிக்காத; இலவசமான.

  ‘தர்ம ஆஸ்பத்திரி’
  ‘கோயிலில் தர்ம தரிசனம்’
  ‘தர்ம சத்திரம்’

தமிழ் தீரம் யின் அர்த்தம்

தீரம்

பெயர்ச்சொல்

 • 1

  பயம் இல்லாமல் எதையும் செய்யும் துணிவு.

  ‘தீரம் மிகுந்த வீரர்கள்’
  ‘தீரச் செயல் புரிந்த சிறுவர்களுக்கு விருது’

தமிழ் தரம் யின் அர்த்தம்

தரம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  ஒன்று சிறப்பானது, நல்லது, அளவில் பெரியது அல்லது சிறியது போன்று நிர்ணயம் செய்வதற்கான அடிப்படை.

  ‘மாணவர்களின் கல்வித் தரம் உயர்ந்திருக்கிறதா?’
  ‘சில திரைப்படங்கள் இரண்டாம் தரமாகக்கூட இல்லை’
  ‘இந்தக் கடையில் கிடைக்கும் அரிசி உயர் தரமானதுதான்’
  ‘தேங்காய்களைப் பெரிது, சிறிது எனத் தரவாரியாகப் பிரித்து வைத்திருந்தார்’
  ‘பல தரங்களில் தேயிலைத் தூள் விற்பனைக்கு வருகிறது’

 • 2

  (தகுதியில்) உயர்வு; சிறப்பு.

  ‘அண்மையில் வெளிவந்த தரமான நாவல்களுள் இதுவும் ஒன்று’
  ‘எப்போதும்போல் இன்றும் உங்கள் பேச்சு தரமாக அமைந்திருந்தது’

தமிழ் தரம் யின் அர்த்தம்

தரம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு தடவை.

  ‘இரண்டு மூன்று தரம் கூப்பிட்டும் அவர் வரவில்லை’
  ‘உங்களை முதல் தரம் நான் எங்கே பார்த்தேன் என்று நினைவிருக்கிறதா?’