தமிழ் தராதரம் யின் அர்த்தம்

தராதரம்

பெயர்ச்சொல்

 • 1

  (அந்தஸ்து, வயது அடிப்படையில்) வகைப்படுத்தி நிர்ணயிக்கும் தகுதி.

  ‘ஆளுடைய தராதரம் தெரியாமல் பேசிவிட்டான்’
  ‘ஏழை, பணக்காரன் என்ற தராதரமெல்லாம் சாவுக்கு ஏது?’

 • 2

  குறைநிறைகளின் அடிப்படையிலான மதிப்பு.

  ‘படைப்புகளின் தராதரத்தைப் பொறுத்தே இலக்கியப் பத்திரிகையின் தரம் அமைகிறது’