தரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தரி1தரி2தரி3

தரி1

வினைச்சொல்தரிக்க, தரித்து

 • 1

  (உடை, மாலை முதலியன) அணிதல்/(திருநீறு, சந்தனம் முதலியவற்றை) பூசிக்கொள்ளுதல்.

  ‘கதர் உடை தரித்த தியாகிகள்’
  ‘மேனி முழுதும் விபூதி தரித்துச் சிவப்பழமாகக் காணப்பட்டார்’

 • 2

  (ஆயுதம்) ஏந்துதல்; தாங்குதல்.

  ‘அந்த நாட்டின் இளைஞர்கள் துப்பாக்கி தரித்துப் போராடத் தயாராகிவிட்டார்கள்’

 • 3

  (திரைப்படத்தில், நாடகத்தில் ஏதேனும் ஒரு பாத்திரத்தின் வேடம்) அணிந்து தோன்றுதல்.

  ‘திரைப்படத்தில் பல்வேறு வேடங்கள் தரித்துப் புகழ்பெற்றவர்’

 • 4

  இலங்கைத் தமிழ் வழக்கு நிற்றல்; பொறுத்தல்.

  ‘ஒரு கணம் தரித்துப் பின் கதவைத் திறந்தான்’

தரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தரி1தரி2தரி3

தரி2

வினைச்சொல்தரிக்க, தரித்து

 • 1

  (ஓர் இடத்தில்) நிலைத்தல்; தங்குதல்.

  ‘அவன் ராசி அப்படி; ஓர் இடத்தில் தரிக்க மாட்டான்’
  ‘என் உடலில் உயிர் தரித்திருப்பது மகனுக்காக’

தரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தரி1தரி2தரி3

தரி3

வினைச்சொல்தரிக்க, தரித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு முடிவுக்கு வருதல்; முடிதல்.

  ‘வேலையில் தொடங்கிய பழக்கம் கல்யாணத்தில் தரித்தது’