தமிழ் தற்காலிகம் யின் அர்த்தம்

தற்காலிகம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  நிரந்தரமாக இல்லாமல் குறைந்த கால வரையறைக்கு உட்பட்டது.

  ‘இந்த வேலை தற்காலிகமானதுதான்’
  ‘முறையற்ற நடத்தைக்காக அந்த அலுவலரைத் தற்காலிக பணி நீக்கம்செய்திருக்கிறார்கள்’
  ‘மழை பெய்வதால் தளம் போடும் வேலை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது’
  ‘இது என்னுடைய தற்காலிகமான முகவரி’
  ‘தற்காலிகமான லாபங்களுக்கு ஆசைப்பட்டுச் சுய கௌரவத்தை இழந்துவிடாதே’