தமிழ் தலைப்பு யின் அர்த்தம்

தலைப்பு

பெயர்ச்சொல்

 • 1

  (கதை, கட்டுரை, சொற்பொழிவு முதலியவற்றுக்கு அல்லது செய்தித்தாளில் செய்திகளுக்குத் தரப்பட்டிருக்கும்) பொருள் அடிப்படையிலான பெயர்.

  ‘நீ எழுதிய கதைக்கு ‘பாலம்’ என்று தலைப்புத் தந்திருக்கலாம்’
  ‘‘சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதவும்’

 • 2

  (ஓர் ஓவியத்தில் அல்லது புகைப்படத்தில்) குறிப்பான பொருள் தரும் சொல், தொடர் அல்லது குறியீடு.

  ‘ஓவியர் தன் ஓவியத்தின் தலைப்பாக ஒரு கேள்விக்குறி இட்டிருந்தார்’

தமிழ் தலைப்பு யின் அர்த்தம்

தலைப்பு

பெயர்ச்சொல்

 • 1

  (தாள் முதலியவற்றில்) மேல் பகுதி/(புடவையின்) முந்தானை; (வேட்டியில்) அகலப் பகுதியின் தொடக்கம்.

  ‘தாளின் தலைப்பில் ஏதோ எழுதியிருந்தது’
  ‘அவள் புடவைத் தலைப்பை இழுத்துத் தலையை மூடிக்கொண்டாள்’
  ‘வேட்டித் தலைப்பு கிழிந்துவிட்டது’

 • 2

  (ஆறு, வாய்க்கால் முதலியவற்றில்) தொடக்கப் பகுதி.

  ‘வாய்க்கால் தலைப்பு மண் மூடிக் கிடக்கிறது’