தமிழ் தலைமுறை யின் அர்த்தம்

தலைமுறை

பெயர்ச்சொல்

 • 1

  ஒருவர் பிறந்து வளர்ந்து மற்றுமொரு சந்ததியை உருவாக்கும்வரை உள்ள (இருபத்தைந்து அல்லது முப்பது ஆண்டு) காலப் பகுதி.

  ‘மூன்று தலைமுறைகளுக்கு முன்பு அந்தக் குடும்பம் இந்தக் கிராமத்தில் குடியேறியது’
  ‘தலைமுறைதலைமுறையாகக் கொண்டாடிவரும் பண்டிகை இது’

 • 2

  ஒரு குறிப்பிட்ட காலத்தைச் சேர்ந்தவர்கள்.

  ‘அந்தத் தியாகிகளின் லட்சியங்களுக்காகத் தொடர்ந்து பாடுபட வேண்டியது இன்றைய தலைமுறையின் கடமையாகும்’
  ‘எங்கள் தலைமுறையில் பல பழக்கவழக்கங்களைக் கைவிட்டுவிட்டோம்’
  ‘இளைய தலைமுறை துடிப்போடு இருக்கிறது’

 • 3

  குறிப்பிட்ட சாதனத்தின் தயாரிப்பில் பழையதைவிடப் புதியது தொழில்நுட்ப ரீதியாகக் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுக் காணப்படும் நிலை.

  ‘நான்காம் தலைமுறைச் செயற்கைக்கோள்’
  ‘மூன்றாம் தலைமுறைக் கணிப்பொறி’