தமிழ் தலைமுழுகு யின் அர்த்தம்

தலைமுழுகு

வினைச்சொல்-முழுக, -முழுகி

 • 1

  (ஒருவர் இறந்ததும் அவருடன் இருந்த உறவுகள் முடிவடைந்ததைக் குறிக்கும் வகையில்) தலைமேல் தண்ணீர் விட்டுக் குளிக்கும் சமயச் சடங்கை நிறைவேற்றுதல்.

 • 2

  முற்றிலுமாகக் கைவிடுதல்.

  ‘லாபகரமாக இல்லாத தொழிலைத் தலைமுழுகிவிட வேண்டியதுதானே’

 • 3

  வட்டார வழக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்தல்.

 • 4

  (ஒருவருடைய உறவை, தொடர்பை) முற்றிலுமாகத் துண்டித்துக்கொள்ளுதல்.

  ‘இப்படி ஒரு காரியம் செய்தவனைத் தலைமுழுகாமல் என்ன செய்ய வேண்டும் என்கிறாய்?’
  ‘என் ஆயுளுக்கும் அவள் தொடர்பே வேண்டாம் என்று தலைமுழுகிவிட்டேன்’