தமிழ் தலையில் கை வை யின் அர்த்தம்

தலையில் கை வை

வினைச்சொல்வைக்க, வைத்து

  • 1

    (தனக்கு உதவி செய்தவருக்கே) இடையூறு அல்லது தீங்கு விளைவித்தல்; பாதிப்பு ஏற்படும்படி செய்தல்.

    ‘வியாபாரம் தொடங்கட்டும் என்று வங்கியில் கடன் வாங்கிக்கொடுத்தால் பணத்தைக் கட்டாமல் என் தலையில் கை வைத்துவிட்டான்’
    ‘உனக்கு வேலை வாங்கித் தந்தவன் தலையில் கை வைத்துவிடுவாய் போலிருக்கிறதே’