தமிழ் தலையில் தூக்கிவைத்துக்கொள் யின் அர்த்தம்

தலையில் தூக்கிவைத்துக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    (தகுதிக்கும் அதிகமாக ஒருவருக்கு) மதிப்புத் தந்து கொண்டாடுதல்; இடம்கொடுத்தல்.

    ‘வேண்டியவர் என்றால் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு புகழ்வதும் வேண்டாதவர் என்றால் தூற்றுவதும் அவருக்குப் பழக்கம்’
    ‘அவரிடம் நிறைய பணம் இருக்கிறது என்பதற்காக அவரை நீங்கள் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடுகிறீர்களே!’
    ‘ஒரு காலத்தில் அவரைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடியவர்களே இன்று அவரை மதிப்பதில்லை’