தமிழ் தலைவாசல் யின் அர்த்தம்

தலைவாசல்

பெயர்ச்சொல்

 • 1

  (வீட்டின் உள்ளே நுழையும்போது இருக்கும்) முன்வாசல்.

  ‘வீட்டின் தலைவாசலில் தோரணம் கட்டியிருந்தது’
  ‘தலைவாசலுக்கு உயரம் போதாது’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு வீட்டின் முன்வாசலை ஒட்டி அமைந்திருக்கும் வராந்தா.

  ‘தலைவாசலில் யாரோ நிற்கிறார்கள்; யார் என்று பார்’
  ‘அவர்கள் தலைவாசலில் இருந்து கதைத்துக்கொண்டிருந்தார்கள்’