தமிழ் தளதளவென்று யின் அர்த்தம்

தளதளவென்று

வினையடை

 • 1

  செழிப்பாக.

  ‘நாற்று தளதளவென்று இருந்தது’
  ‘தளதளவென்று வளர்ந்திருந்த பச்சைப்புல்’
  ‘ஓடை தளதளவென்று பசுமை போர்த்திக்கொண்டு மிளிர்ந்தது’

 • 2

  (நீர், பால் போன்றவற்றைச் சுடவைக்கும்போது) நுரைத்துக் குமிழிகள் தோன்றும் அளவுக்கு.

  ‘நீர் தளதளவென்று கொதிக்க வேண்டும்’