தமிழ் தளர்ச்சி யின் அர்த்தம்

தளர்ச்சி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  சோர்வு; களைப்பு.

  ‘காய்ச்சலுக்குப் பின் தளர்ச்சியாக இருக்கிறது’
  ‘முதுமைத் தளர்ச்சி காரணமாக அவர் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டார்’
  ‘ஒரு நீண்ட பயணத்திற்குப் பின் அவர் தளர்ச்சியும் அலுப்புமாக வீடு திரும்பினார்’

 • 2

  (நடை முதலியவற்றில் ஏற்படும்) தொய்வு.

  ‘நடையில் ஒரு தளர்ச்சி தெரிந்தது’
  ‘அவருடைய உடல் நாளுக்கு நாள் தளர்ச்சியடைந்துகொண்டே வந்தது’

 • 3

  (மன உறுதி) குலைவு.

  ‘பல முறை தோற்றும் தளர்ச்சி அடையாமல் மீண்டும் முயற்சிசெய்தாள்’

 • 4

  (உடையைக் குறித்து வரும்போது) இறுக்கமில்லாத நிலை.

  ‘வயதானவர்களுக்குத் தைக்கும் உடைகள் தளர்ச்சியாக இருப்பது நல்லது’
  ‘வெயில் காலத்தில் தளர்ச்சியான உடைகள் அணிய வேண்டும்’