தமிழ் தள்ளு யின் அர்த்தம்

தள்ளு

வினைச்சொல்தள்ள, தள்ளி, தள்ளாமல், தள்ளவில்லை, தள்ளாத போன்ற எதிர்மறை வடிவங்களில்

 • 1

  (ஒருவரை அல்லது ஒன்றை) ஒரு திசையில் விசையுடன் முன்னோக்கிச் செல்லுமாறு செய்தல்/(கீழே) விழுமாறு செய்தல்.

  ‘நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு எழுந்து நின்றான்’
  ‘கோபத்தில் பையனை அறையில் தள்ளிக் கதவைச் சாத்தினார்’
  ‘தன்மேல் சவாரி செய்தவனைக் குதிரை கீழே தள்ளிவிட்டது’

 • 2

  (உள்ளிருந்து) விசையுடன் வெளியேற்றப்படுதல்.

  ‘குதிரையின் வாயில் நுரை தள்ளியது’

 • 3

  (ஒரு நிர்ப்பந்தத்திற்கு) உள்ளாக்குதல்.

  ‘கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்’

 • 4

  (பயனற்றது என்று) ஒதுக்குதல்.

  ‘வெளியிடத் தகுதியற்றது என்று இந்தக் கட்டுரையைத் தள்ளிவிட முடியாது’
  ‘இது நன்றாக இல்லை, அது நன்றாக இல்லை என்று தள்ளிக்கொண்டே போனால் ஒன்றையும் தேர்ந்தெடுக்க முடியாது’

 • 5

  பேச்சு வழக்கு (பணத்தை) லஞ்சமாகக் கொடுத்தல்.

  ‘இந்த அலுவலகத்தில் ஐம்பதோ நூறோ தள்ளினால்தான் காரியம் நடக்கும்’

 • 6

  (ஈடுபாடு இல்லாமல்) காலத்தைக் கழித்தல்.

  ‘தனிமையில் நாட்களைத் தள்ளிவருகிறேன்’
  ‘இந்த ஊரில் இருப்பதே எனக்குப் பிடிக்கவில்லை, ஏதோ காலத்தைத் தள்ளிக்கொண்டிருக்கிறேன்’

 • 7

  (நூலின் பக்கங்களை) புரட்டுதல்.

  ‘புத்தகத்தின் பக்கங்களைத் தள்ளிக்கொண்டே போனான்’

 • 8

  பேச்சு வழக்கு (வேலை, பொறுப்பு முதலியவற்றிலிருந்து ஒருவரை) நீக்குதல்.

  ‘தொடர்ந்து ஒரு வாரம் கடைக்குப் போகாததால் வேலையிலிருந்து தள்ளிவிட்டார்’

 • 9

  (குறிப்பிட்ட தொகையை) கழித்தல்.

  ‘நீ மிகவும் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டால் ஒருவேளை அவர் ஆயிரம் ரூபாய் தள்ளிக் கொடுக்கலாம்’

 • 10

  (ஏவல் வடிவங்களில் வரும்போது) பொருட்படுத்தாமல் விடுதல்.

  ‘செலவைத் தள்ளு; எவ்வளவு அலைச்சல்!’

 • 11

  இசைத்துறை
  விடுதல்.

  ‘இந்தப் பாட்டைக் கால் இடம் தள்ளி ஆரம்பித்தால் எடுப்பாக இருக்கும்’

தமிழ் தள்ளு யின் அர்த்தம்

தள்ளு

வினைச்சொல்தள்ள, தள்ளி, தள்ளாமல், தள்ளவில்லை, தள்ளாத போன்ற எதிர்மறை வடிவங்களில்

 • 1

  (முதுமையின் காரணமாக) இயல்பாகச் செயல்படுவதற்கு ஏற்ற உடல் வலிமை பெற்றிருத்தல்.

  ‘பெரியவர் பாவம் தள்ளாமல் கிடக்கிறார்’
  ‘இந்தத் தள்ளாத நிலையிலும் அவர் உழைத்துச் சாப்பிடுகிறார்’

தமிழ் தள்ளு யின் அர்த்தம்

தள்ளு

துணை வினைதள்ள, தள்ளி, தள்ளாமல், தள்ளவில்லை, தள்ளாத போன்ற எதிர்மறை வடிவங்களில்

 • 1

  முதன்மை வினை குறிப்பிடும் செயல் அளவுக்கு அதிகமாக நிகழ்வதைக் குறிக்கும் துணை வினை.

  ‘தரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் நூற்றுக்கணக்கில் கதை எழுதித் தள்ளிவிட்டார்’
  ‘அவர் வீடாக வாங்கித் தள்ளுகிறார்’

 • 2

  எதையும் பொருட்படுத்தாமல், எந்த விதத் தயக்கமுமின்றி ஒன்றை இல்லாமல் ஆக்குவதைக் குறிப்பிடும் துணை வினை.

  ‘எதற்கும் பயனில்லாத அந்த முள் மரத்தை வெட்டித்தள்ளு’
  ‘இந்தத் துரோகியைச் சுட்டுத்தள்ளினால் என்ன?’