தமிழ் தளிர் யின் அர்த்தம்

தளிர்

வினைச்சொல்தளிர்க்க, தளிர்த்து

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு துளிர் விடுதல்.

  ‘பட்ட மரம் தளிர்க்குமா?’
  உரு வழக்கு ‘மனத்தில் தளிர்க்கும் புதிய ஆசைகள்’

தமிழ் தளிர் யின் அர்த்தம்

தளிர்

பெயர்ச்சொல்

 • 1

  (மரம், செடி, கொடி ஆகியவற்றில்) புதிதாகத் துளிர்த்திருக்கும் மென்மையான இளம் இலை.

  ‘மரத்தின் தளிர்கள் வசந்தத்தின் வருகையை அறிவித்தன’
  ‘குழந்தையின் தளிர் போன்ற விரல்’