தமிழ் தவறவிடு யின் அர்த்தம்

தவறவிடு

வினைச்சொல்-விட, -விட்டு

 • 1

  (பேருந்து, ரயில் முதலியவற்றில் ஏறாமல் அல்லது வேண்டிய இடத்தில் இறங்காமல்) விடும்படி நேர்தல்.

  ‘இந்தப் பேருந்தைத் தவற விட்டால் அலுவலகத்திற்கு உரிய நேரத்தில் போக முடியாது’

 • 2

  (ஒன்றை) தொலைத்தல்.

  ‘தங்க மோதிரத்தைத் தவறவிட்டு வந்து நிற்கிறாயே!’

 • 3

  (வாய்ப்பை) நழுவவிடுதல்.

  ‘உனக்குக் கிடைத்த அரிய சந்தர்ப்பத்தைத் தவறவிட்டுவிட்டாயே’