தமிழ் தவறுதலாக யின் அர்த்தம்

தவறுதலாக

வினையடை

  • 1

    (உரியவரிடம் அல்லது உரிய இடத்தில் இல்லாமல்) மற்றொருவரிடம் அல்லது மற்றொரு இடத்தில்; கவனப்பிசகாக.

    ‘உங்களிடம் தர வேண்டிய கடிதத்தைத் தவறுதலாக உங்கள் தம்பியிடம் கொடுத்து விட்டேன்’
    ‘சாவியைத் தவறுதலாக எங்கோ வைத்துவிட்டு அரை மணி நேரமாகத் தேடிக்கொண்டிருக்கிறார்’