தமிழ் தீவிரம் யின் அர்த்தம்

தீவிரம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (ஒரு செயலைச் செய்வதில்) வழக்கத்தைவிட அதிகமான கவனமும் கூடுதலான முனைப்பும்.

  ‘பணப் பிரச்சினையை எப்படிச் சமாளிப்பது என்று அவர் தீவிரமாக யோசித்தார்’
  ‘வேலை தேடுவதில் தீவிரமாக இறங்கினான்’
  ‘தேர்வு நெருங்கநெருங்க அவன் தீவிரமாகப் படிக்கத் தொடங்கினான்’
  ‘அவரிடம் ஒரு தீவிர ஆன்மீகத் தேடல் இருந்தது’

 • 2

  (ஒரு நிலைமையின்) கடுமை; உக்கிரம்.

  ‘அவர் வழக்கின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளவே இல்லை’
  ‘புற்றுநோய் தீவிரமடைவதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டால் ஓரளவு குணப்படுத்த முடியும்’

 • 3

  (பெரும்பாலும் தீவிர, தீவிரமான என்ற வடிவங்களில்) (தீர்வு, கொள்கை முதலியவற்றில்) மிகக் கடுமையான நிலை.

  ‘நீங்கள் திருமணம் செய்துகொள்வதில்லை என்ற தீவிர முடிவுக்கு வரக் காரணம் என்ன?’
  ‘தற்கொலை செய்துகொள்வது ஒரு தீவிர முடிவு’