தமிழ் தாக்கல்செய் யின் அர்த்தம்

தாக்கல்செய்

வினைச்சொல்-செய்ய, -செய்து

 • 1

  (நீதிமன்றம் முதலியவற்றில் வழக்கை) பதிவுசெய்தல்; அளித்தல்.

  ‘உயர் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட வகை வழக்குகளை மட்டுமே தாக்கல்செய்ய முடியும்’

 • 2

  (சாட்சியம் முதலியவற்றை) ஒப்படைத்தல்.

  ‘என் கட்சிக்காரர் சார்பில் புதிய சாட்சியங்களைத் தாக்கல்செய்ய அனுமதிக்க வேண்டும்’

 • 3

  (தேர்தலில் போட்டியிடுவதற்காக) விண்ணப்பத்தை முறையாகச் சமர்ப்பித்தல்.

  ‘கட்சித் தலைவர் நேற்று வேட்புமனு தாக்கல்செய்தார்’

 • 4

  (வரவு செலவுத் திட்டம் முதலியவற்றை) சமர்ப்பித்தல்.

  ‘வரவுசெலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்செய்யப்படும்’
  ‘புதிய மருத்துவப் பல்கலைக்கழகம் நிறுவுவதற்கான மசோதா சட்டசபையில் தாக்கல்செய்யப்பட்டது’

 • 5

  அருகிவரும் வழக்கு (குறிப்பேட்டிலிருந்து பதிவேட்டில்) எடுத்தெழுதுதல்.

  ‘நேற்றைய கணக்குகளைத் தாக்கல்செய்து விட்டீர்களா?’