தமிழ் தான்தோன்றி யின் அர்த்தம்

தான்தோன்றி

பெயர்ச்சொல்

  • 1

    எந்தக் கட்டுப்பாடும் ஒழுங்கும் இல்லாமல் செயல்படும் தன்மை/இந்தத் தன்மையைக் கொண்ட நபர்.

    ‘ஒரு தான்தோன்றிப் பயலுக்கு என் பெண்ணைத் தர முடியாது என்று அப்பா சத்தம்போட்டார்’
    ‘இந்தத் தான்தோன்றியை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க முடியாது’
    ‘தான்தோன்றியாகத் திரியும் மகனை நம்பித் தொழிலை விரிவுபடுத்தத் தயக்கமாக இருக்கிறது’