தமிழ் தாம்பூலம் வைத்து அழை யின் அர்த்தம்

தாம்பூலம் வைத்து அழை

வினைச்சொல்அழைக்க, அழைத்து

  • 1

    (கேலியாகக் குறிப்பிடும்போது) (ஒருவருக்குச் சம்பிரதாயமான மரியாதையைக் கொடுத்து) அழைத்தல்.

    ‘கூப்பிட்டதும் சாப்பிட வர மாட்டாயா? நான் வந்து தாம்பூலம் வைத்து அழைக்க வேண்டுமா?’
    ‘சொந்த மாமாவின் வீட்டுக்குக்கூட தாம்பூலம் வைத்து அழைத்தால்தான் வருவாய் போலிருக்கிறதே’
    ‘தேடினால்தான் வேலை கிடைக்கும். யாரும் தாம்பூலம் வைத்து அழைத்து வேலை போட்டுத்தர மாட்டார்கள்’