தமிழ் தாராளமாக யின் அர்த்தம்
தாராளமாக
வினையடை
- 1
தேவையை நிறைவேற்றுவதோடு மட்டும் அல்லாமல் அதற்கும் மேலாக.
‘இந்த வருமானம் நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்குத் தாராளமாகப் போதும்’‘இப்போதுள்ள தட்டுப்பாடு நீங்கியதும் பால் தாராளமாகக் கிடைக்கும்’ - 2
எந்த விதத் தயக்கமும் இல்லாமல்; விரும்பியபடியே.
‘‘இந்தப் புத்தகத்தை நான் பார்க்கலாமா?’ ‘ஓ, தாராளமாக!’’‘வேலை செய்ய விருப்பம் இல்லை என்றால் நீ தாராளமாக விலகிக்கொள்ளலாம்’ - 3
எந்த விதச் சிரமமும் இல்லாமல் வசதியாக.
‘இந்த வீட்டில் தாராளமாக ஆறு பேர் இருக்கலாம்’‘இந்தச் சாப்பாட்டைத் தாராளமாக நூறு பேர் சாப்பிடலாம்’ - 4
கட்டுப்பாடோ தடையோ இல்லாமல்.
‘தடைசெய்யப்பட்ட மருந்துகள் கடைகளில் தாராளமாக விற்கப்படுகின்றன’