தமிழ் திக்கி யின் அர்த்தம்

திக்கி

வினைச்சொல்திக்கிக்க, திக்கித்து

  • 1

    (செய்தி தரும் அதிர்ச்சியால், அசாதாரண நிகழ்வால்) துணுக்குறுதல்; திகைத்தல்.

    ‘தன் மகனைப் பொறியியல் கல்லூரியில் சேர்க்க அவர் ஐந்து லட்சம் நன்கொடை தந்ததைக் கேட்டதும் நான் திக்கித்துப்போய்விட்டேன்’
    ‘‘மாடு கடித்து விட்டது’ என்றதும் எல்லோரும் திக்கித்துப்போய் அவனைப் பார்த்தார்கள்’