தமிழ் திசைதிருப்பு யின் அர்த்தம்

திசைதிருப்பு

வினைச்சொல்-திருப்ப, -திருப்பி

  • 1

    (ஒருவருடைய பேச்சு, கவனம் முதலியவற்றை அவற்றின்) போக்கிலிருந்து மாற்றி வேறொன்றில் செலுத்துதல்.

    ‘பொம்மை கேட்டு அடம்பிடித்த குழந்தையின் கவனத்தைத் திசைதிருப்ப முயன்றேன்’
    ‘கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் பேச்சைத் திசைதிருப்பப் பார்க்கிறாயா?’