தமிழ் தினம் யின் அர்த்தம்

தினம்

பெயர்ச்சொல்

 • 1

  நாள்.

  ‘இரண்டு தினங்களாக எனக்கு உடம்பு சரியில்லை’

 • 2

  (குறிப்பிட்ட நோக்கத்தை அல்லது அக்கறையைப் பரவலாகப் பொதுமக்கள் கவனத்திற்குக் கொண்டுவருவதற்காக அல்லது ஒன்றைக் கொண்டாடும் விதத்திலோ பெருமைப்படுத்தும் விதத்திலோ) ஆண்டுக்கு ஒரு முறை அனுசரிக்கப்படும் நாள்.

  ‘காதலர் தினம்’
  ‘மகளிர் தினம்’
  ‘குழந்தைகள் தினம்’
  ‘ஆசிரியர் தினம்’

தமிழ் தினம் யின் அர்த்தம்

தினம்

வினையடை

 • 1

  ஒவ்வொரு நாளும்.

  ‘அவன் படிப்பதற்காகத் தினம் என் வீட்டுக்கு வருவான்’
  ‘தினம் பணம் கொடு என்று கேட்டால் நான் என்ன செய்ய முடியும்?’